Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 26-06-2021

26

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சமூகத்தில் உங்களுடைய மதிப்பு உயரும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு செயலையும் செய்யும் முன் பலமுறை யோசனை செய்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சிக்கலான விஷயங்கள் கூட சுலபமாக முடியக்கூடும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சவாலான சில விஷயங்களை சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக்கொடுத்து செல்வீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான நடவடிக்கையால் நிறைய நன்மைகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான பங்குதாரர்களின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெரிய தொகையை ஈடுபடுத்தி நல்ல லாபம் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது உத்தமம்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுபவப்பூர்வமாக சில விஷயங்களை உணர்ந்து செயல்பட கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிலும் ஏற்றம் காணலாம். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். பகைவர்களின் எண்ணிக்கை உயரும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்க கூடிய அற்புதமான நாளாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நினைத்தது நடக்க கூடிய நல்ல நாளாக இருக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடுமையான உழைப்பை செலுத்துவதன் மூலம் ஏற்றம் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அசதி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிரடி மாற்றங்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடைபெறக் கூடிய அற்புதமான பலன்கள் உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் படிப்படியாக சீராகும். புது வாகனம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சாதக பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் தேவையில்லாத வீண் விரயங்கள் ஏற்படலாம் என்பதால் கவனம் தேவை.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினருடைய ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களுடைய பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அரசு வழி காரியங்கள் மூலம் அனுகூலமான பலன்களைப் பெறலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களிடம் மதிப்பும் மரியாதையும் உயரும். பெரிய மனிதர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கி காணப்படும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். குடும்பத்தில் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக இருக்கும். பொருட் தேக்கம் எதுவும் ஏற்படாது. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல் மற்றும் டென்ஷன் ஏற்படும். வாகன ரீதியான பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே கவனமுடன் செயல்படுவது நல்லது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடிவரும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் மூத்த நபர்களில் அறிவுரையை கேட்டு நடந்து கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர் வரும் பிரச்சனைகளை தன்னம்பிக்கையுடன் தகர்த்து எறிவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன வலிமை கூடும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமுதாயத்தின் மீதான அக்கறை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு நேயம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி வரும்.