Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 18-06-2021

22

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு விஷயத்தையும் அடுத்தவர்களை நம்பி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணரும் சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மேலும் விருத்தி உண்டாக முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளியிடங்களில் புதிய அனுபவம் உண்டாகும். தந்தைவழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண்பழி, விமர்சனங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எவ்வளவு தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்து எறிவார்கள். ஆரோக்கியம் கவனம் தேவை.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு பெற முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் எண்ணம் மேலோங்கி காணப்படும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சாற்றலால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து உங்களுக்கு தேவையானதை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களுடைய ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நிலுவை தொகைகளை வசூல் செய்வதற்கு வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் அகலும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவ்வளவு தடைகள் வந்தாலும் தகர்த்தெரிந்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்ட சில விஷயங்கள் மீண்டும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் பிரச்சனை வராமல் இருக்க கூடுமானவரை விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரவுக்கு மீறிய செலவு வரும் என்பதால் அவதிப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொறுமை அதிகம் தேவைப்படும் நாளாக இருக்கிறது. வார்த்தைகளை உதிர்த்து விட்டால் மீண்டும் அல்ல முடியாது என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் ரீதியான அசதி ஏற்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொலை தூர உற்றார் உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன்களை பெற இருக்கிறீர்கள். சுப காரிய தடைகள் விலகி வெற்றி கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்காலம் பற்றிய கவலைகள் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயலாற்றுவது நல்லது. ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மற்றவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை சில இடங்களில் குறைய ஆரம்பிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்ற போராடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளில் கூடுதல் அக்கறை தேவை. தேவையற்ற நண்பர்களின் அறிமுகத்தை தவிர்த்து விடுவது உத்தமம். வெளியிட பயணங்களில் கவனம் தேவை.

தனுசு

ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய புதிய பாதையை நோக்கி பயணிக்க முற்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுபகாரிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பதட்டமான சூழல் நிலவும். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன் சற்று சிந்தித்து எடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாமல் தவிக்கக் கூடிய சூழல் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை நீடிக்கும். மேலதிகாரிகளின் தொந்தரவு எரிச்சலூட்டும் வகையில் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவ பொறுமை தேவை. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த பயம் மேலோங்கி காணப்படும். ஒருசிலருக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் செய்யும் மாற்றங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் அறிவுரை கேட்டு நடந்து கொள்வது நல்லது. புதிய சொத்து வாங்கும் முயற்சியில் காலதாமதம் ஏற்படலாம். ஆரோக்கியம் படிப்படியாக சீராகும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. பொருளாதார ரீதியான ஏற்றங்கள் மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையான சமயத்தில் பண வரவு சீராக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய கூட்டாளிகளின் அறிமுகம் கிடைக்கும். உங்களை நம்பி இருப்பவர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவீர்கள். ஆரோக்கியம் கவனம் தேவை.