Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 17-06-2021

23

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் பணத்தேவைகளை யாவும் பூர்த்தியாகும் இனிய நாளாக இருக்கும். உற்றார் உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பழைய நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தொலை தூரத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அடுத்தவர்கள் நலனில் அக்கறை அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இட மாற்றங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிகுதியாக காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மறக்க முடியாத சில நிகழ்வுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் இணக்கம் ஏற்படும். விட்டுச் சென்ற சிலர் விரும்பி வந்து சேர்வார்கள். சேமிப்பு உயரும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் உற்சாகம் அதிகரித்து காணப்படும். தொல்லை கொடுத்துவந்த எதிரிகளின் பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பணவரவு கிடைக்கப்பெறும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்ததை விட அனுகூலமான பலன்கள் கிடைக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு குடும்ப பொறுப்புகள், வேலை தொடர்பான விஷயங்களிலும் சுமை அதிகரிக்கும் இதனால் மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் சந்தர்ப்பங்கள் அமையும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்துவந்த சங்கடங்கள் நீங்கி சுபிட்சம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் செய்யும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். மனரீதியான வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எந்த காரியத்தையும் எளிதில் சாதித்துக் காட்ட கூடிய தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் நட்பு வட்டம் மேலும் விரிவடைய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வளர்ச்சி பாதை சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய இறை பக்தியின் மீது ஆர்வம் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வளர்ச்சி அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பண ரீதியான கொடுக்கல் வாங்கலில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் அளவிற்கு நன்மைகள் நடைபெறக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தடைப்பட்ட சுப காரியங்களில் வெற்றி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில், கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரிக்கும் மேலும் குடும்பச் சுமை அதிகரித்து தொழில் வளர்ச்சியை பாதிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள உங்களுடைய வளர்ச்சியை மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொலைதூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் நல்லபடியாக நிறைவேறும். குடும்பத்தில் சில குழப்பங்கள் உண்டு பண்ண பார்ப்பார்கள் எனினும் ஒருவரை ஒருவர் அனுசரித்து விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும். ஆரோக்யம் சீராக இருக்கும்.