Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 12-09-2020

26

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய மனோதிடம் உருவாகக்கூடும். பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தாலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றிகரமாக முடியக்கூடும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய நல்ல வழிகள் தென்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் காணப்படும். கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்கள் மூலம் வீண் விரயங்களை சந்திக்க நேரிடலாம். அதனால் சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரக்கூடிய சாதகமான அமைப்பு என்பதால் எந்த விஷயங்களையும் தட்டிக் கழிக்காதீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும். எதிர்பாராத நபர்கள் மூலம் எதிர்பாராத செய்திகள் கிடைக்கும். பெண்களுக்கு உடல் சோர்வு உண்டாகக்கூடும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக அமைய இருப்பதால் மன மகிழ்ச்சி உண்டாக கூடும். தொழில் மற்றும் வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றம் காணப்படும். சக தொழிலாளர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சுயதொழில் புரியும் பெண்களுக்கு எதிர்பாராத புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தை தரும் அமைப்பு என்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் உண்டு. சுயதொழில் புரியும் நபர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன சஞ்சலங்கள் ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் உண்டு. மனதில் தேவையில்லாத குழப்பங்கள் சந்தேகங்கள் ஏற்படக்கூடும். எதையும் அதிகம் போட்டு அலட்டிக் கொள்ளாமல் இருப்பது உத்தமம். ஒரு சிலருக்கு வீடு மனை போன்றவற்றை வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றத்தைத் தரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் தடையின்றி வெற்றி தரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சந்திராஷ்டமம் இருக்கும் நட்சத்திரக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நீண்ட நாள் நினைத்த காரியம் ஒன்று நடக்க இருக்கிறது. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி பரஸ்பர அன்பு அதிகரிக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் பழி உண்டாகக் கூடிய வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனமாக இருப்பது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஓய்வு தேவைப்படக்கூடிய அவசியம் ஏற்படக்கூடும். ஓயாத உழைப்பால் உடல் நலத்தில் சில பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். பறவைகளுக்கு உணவிடுங்கள் மன அமைதி பிறக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. பணவரவு திருப்திகரமாக இருப்பதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சனைகள் குறைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். சக தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஆதாயம் காணலாம். முருக வழிபாடு நன்மை தரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. பெரிய தொகையை ஈடுபடுத்தும் பொழுது கூடுதல் கவனமுடன் இருப்பது நல்லது. பொருளாதார ரீதியான சிக்கல்கள் இருந்தாலும் அதை நீங்கள் திறம்பட சமாளிப்பதற்கு உரிய ஆற்றல் பிறக்கும். ஒருசிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். ஒருசிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் தாமத பலன் கிடைத்தாலும் வெற்றி அடையலாம்.