Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசிபலன் 15.06.2021

18

மேஷம்

மேஷம்: பயணங்களால் அலைச் சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

 

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வார்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மிதுனம்

மிதுனம்: உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். பிள்ளை களின் பிடிவாதம் தளரும். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள் . பழைய பிரச்னைகள் தீரும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.

கடகம்

கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர் சனங்களுக்கும் கேலிப் பேச்சிற் கும் ஆளாவீர்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை‌ நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

சிம்மம்

சிம்மம்: விலை உயர்ந்தப் பொருட் களை கவனமாக கையாளுங்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோ கத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக் கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

கன்னி

கன்னி: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதிய கோணத்தில் சிந்தித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிறப்பான நாள்.

 

துலாம்

துலாம்: உறவினர்கள் நண்பர் கள் ஆதரவாகப் பேசத் தொடங்கு வார்கள். மற்றவர்களுக் காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.

 

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

தனுசு

தனுசு: சந்திராஷ்டமம் இருப் பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விழிப்புடன் இருக்க வேண்டிய நாள் .

மகரம்

மகரம்: மனைவி வழியில் அனுகூலம் உண்டு. புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.

 

கும்பம்

கும்பம்: விஐபிகள் அறிமுக மாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு‌ வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் ரசிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள்.

மீனம்

மீனம்: நட்பு வட்டம் விரியும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். குடும் பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.