Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 7-06-2021

51

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ அனுசரித்து செல்வது நல்லது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பகைவர்கள் பிரச்சனைகளை எளிதாக எதிர்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உள்ளம் மகிழும் செய்தி ஒன்று கிடைக்கும். சகோதர சகோதரிகளின் ஆதரவு மேலும் வலுவாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளில் ஆர்வம் செலுத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி ஏற்படும். நினைத்த இடத்தில் இருந்து பணம் வரவு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். மனதிற்குப் பிடித்த நல்ல வரன் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதர வருமானங்கள் மூலம் லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய கொள்கைகள் பின்பற்றுவீர்கள். உங்களை உதறி விட்டுச் சென்ற உறவுகள் மீண்டும் வந்து இணைவதற்கு வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வருமானத்தைவிட வீண் விரயங்கள் அதிகரிக்க கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் கவனம் தேவை.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையான பண வரவு எந்த வழியிலாவது வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். அடுத்தவர்கள் மீது நீங்கள் காட்டும் அக்கறை அனுகூலமான பலன்களை கொடுக்கும். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வைராக்கியத்தோடு செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களின் பகைவர்கள் முன்னிலையில் வீர நடை போடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவே கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி ஓடிவரும் இனிய நாளாக இருக்கும். எடுக்கும் முயற்சியில் அனுகூலம் பலனை காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நினைத்தது நடக்கும். மற்றும் வியாபாரத்தில் எதிர்கால திட்டமிடல் மேலோங்கி காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவ அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்க உணவு கட்டுபாடு மேற்கொள்வது நல்லது.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. சகோதர சகோதரிகளுக்கு இடையே தேவையில்லாத மனக் கசப்புகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் ஒருவரிடம் நம்பி ஒப்படைத்தால் காரியங்களை நீங்களே செய்யும் படியாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் இடத்தில் கவனத்துடன் இருப்பது நல்லது.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. புதிய நட்பு வட்டம் தெரியக் கூடிய வாய்ப்புகளும் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்காலம் பற்றிய சிந்தனை கவலைக்குரியதாக இருக்கும். எதிலும் மனதை தளரவிடாமல் முன்னேறிச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில அதிரடி மாற்றங்கள் ஏற்படலாம். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குறைகள் நீங்க கூடிய அற்புதமான வாய்ப்பாக அமைய இருக்கிறது. நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூல பலன்கள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாக கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாமர்த்தியமாக பேசி உங்களுக்கு தேவையானதை சாதித்துக் கொள்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற சுயதொழில் புரிபவர்கள் போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஏங்குவார்கள். புதிய தொழில் முயற்சிகள் காலதாமத பலன்களை கொடுக்கும். வெற்றிக்கான விநாயகரை வழிபடுதல் சிறப்பு.