Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 4-06-2021

26

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அரைகுறையாக நின்ற சில விஷயங்கள் மீண்டும் செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் வர வேண்டிய தொகைகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விலகி உறவுகள் மீண்டும் வந்து இணைய வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரவை விட செலவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. நண்பர்கள் மூலம் மன உளைச்சலுக்கு ஆளாக நேரலாம். கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள் இனம் கண்டு கொள்வீர்கள். மனதுக்கு பிடித்த வரன் அமைய வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தொலை தூரத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத செலவுகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதால் கூடுமானவரை கவனத்துடன் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுமானவரை கனிவாக பேசி காரியங்களை சாதித்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் ஒன்று நினைக்க அது ஒன்று நடக்கும். தீட்டிய திட்டங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டிய நிலை வரும். சக நண்பர்களின் ஆதரவு குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையில்லாத வீண் பழிகளை சுமக்க வேண்டிய நிலை வரலாம் எனவே கூடுமானவரை பேச்சில் கவனத்துடன் இருப்பது நல்லது.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்ளக் கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பகையாளிகள் தானாகவே வந்து சமாதானமாக பேசுவார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு குறையும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். சமூகத்தின் மீது அக்கறை அதிகரிக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரக்கூடிய செய்திகள் வெற்றி செய்திகளாக அமையும். பெரிதாக நினைத்த விஷயம் கூட சிறிதாக மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையானவர்களின் உதவிக்கரம் கிடைக்கும். உங்களுடைய நட்பு வட்டம் விரிய வாய்ப்புகள் உண்டு. தூக்கத்தில் இருப்பவர்களுக்கு இந்த நோய் பிரச்சனைகள் திடீரென முடிவுக்கு வரும். இதுவரை உங்களை பாடாய் படுத்தி வந்த மன உளைச்சல் குறையும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வருமானம் திருப்திகரமாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். சமூகத்தில் உங்களுடைய புகழ் ஓங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எத்தனை கதவுகள் திறந்தாலும் உங்களுக்கென ஒரு கதவு திறக்கும். பொருளாதார ரீதியான ஏற்றம் வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய உதவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வதில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நீண்ட நாள் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த முயற்சிகள் வெற்றியடையும். சிலருக்கு புதிய பாதை பிறக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்த புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பெற்றோர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். எடுக்கும் முயற்சிகளில் ஜெயம் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரித்து காணப்படும். உங்கள் தகுதியை உயர்த்தக்கூடிய பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வெளியிட பயணங்களைக் கூடுமானவரை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் முடிவுக்கு வரும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முயற்சிகளில் தடையில்லாத வெற்றி பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் களுக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அதிக ஆர்வம் காணப்படும். அரசு ரீதியான விஷயங்களில் அனுகூலமான பலன்களை பெறலாம். பூர்வீக சொத்துக்கள் பலன்தரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.