Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 26-04-2021

46

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பாதைக்கு வழி வகுக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். ஒரு ஜியோ நான் சம்பாதிக்கிறேன் சம்பாதிக்கலாம்

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த இணக்கம் வலுவாகும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும் மூலம் மன அமைதி பெறலாம். குடும்பத்தில் இருக்கும் நபர்களுடன் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். எதிலும் நிதானம் தேவை.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். இறை சிந்தனை அதிகரிக்கும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும் எனினும் கூடுதல் முயற்சி செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் பணிச் சுமையை ஏற்படுத்தும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். பெண்களுக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களால் தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகளில் வீண் அலைச்சல் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யும் முன் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எதையும் திறம்பட சமாளித்து விடுவீர்கள்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் நீங்கி உற்சாகம் தொற்றிக் கொள்ளும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைத்தது இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் கவனம் தேவை.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முதலீடுகள் தவிர்ப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம். குடும்பத்தில் தாய் வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.