Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 23-04-2021

37

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத நபர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பெண்களுக்கு நினைத்தது நடக்கக்கூடிய நாளாக அமையும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் தனலாபம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்ப்புகள் கடந்து முன்னேற்றம் காண்பீர்கள். திருமணம் சார்ந்த விஷயங்களில் சாதகப்பலன் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான பிரச்சினைகளை சந்திக்க நேரலாம்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான பேச்சால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில விஷயங்களை புதிதாக தெரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைக்கு உரிய பாராட்டுகள் கிடைக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தேவையில்லாத அலைச்சல் மற்றும் டென்ஷன் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கிடைக்க வேண்டிய தொகை கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் ஆதரவு பெருகும். பெண்களுக்கு மன மாற்றம் ஏற்படலாம்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத பயணங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான அணுகுமுறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் முன்னேற்றத்தை காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையும். மேலதிகாரிகளிடம் விமர்சனங்களை பெறுவீர்கள்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத மனக் கவலைகள் நீங்கும். எதிர்காலம் பற்றிய பயம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் வலுவாகும். பெண்கள் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமுதாயத்தின் மீதான அக்கறை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் லாபம் காண்பதில் இடையூறுகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் புதிய முயற்சிகள் கைகூடி வெற்றியை தரும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுப்பதை தவிர்ப்பது உத்தமம்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நபர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சவால்களை வென்று விடுவீர்கள்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய முகத்தில் பொலிவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகத்துடன் செயல்பட கூடிய நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தனலாபம் பெருகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெண்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவை இல்லாத கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுமையை கடைபிடிப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய அணுகுமுறை வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். பெண்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவை இல்லாத பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய வேளைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மை தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பண ரீதியான விஷயங்களில் தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நபர்களின் வருகையால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் நெருக்கம் அதிகரிக்கும். பெண்கள் நினைத்தது நடக்கும்.