Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 15-04-2021

30

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை சுற்றியிருப்பவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் இணக்கம் வலுவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய மனிதர்களை கண்டு வியப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் அலட்சியம் செய்யாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் ஒருவிதமான குழப்பநிலை நீடிக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டியாளர்கள் கொடுத்து வந்த தொல்லைகள் விடுபடும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூடுதல் பொறுப்புணர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கிவிடும். சக பணியாளர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய தவறுகளை நீங்களே உணர்ந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் வளம் சிறக்கும். புதிய தொழில் முயற்சிகளில் சாதகப்பலன் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் காணப்படும். அனாவசிய விரயங்களை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார பிரச்சனைகளை சீர் செய்து கொள்ளலாம். ஆரோக்கியம் கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த முயற்சிகள் வெற்றி பாதையை நோக்கி பயணிக்கும். எவ்வளவு இடைஞ்சல்கள் இருந்தாலும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதனை தகர்த்து எரிவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் உற்சாகம் பிறக்கும். முகத்தில் ஒரு பொலிவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இழந்த நன் மதிப்பை மீட்க போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் விரக்தியை உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவு மேலும் வலுவாக வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சரி எது தவறு எது என்று புரியாத சில விஷயங்களில் தீர்வு கிடைக்கும். எடுக்கும் முடிவுகளில் வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் காண கூடுதல் பொறுப்பு தேவை.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உளைச்சல் நீங்கி தெளிவு பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை மேலும் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கூடுதல் உழைப்பை செலுத்துவதன் மூலம் முன்னேற்றம் காணலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சண்டைகள் நீங்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக அமையும். இறைவன் மேல் பாரத்தைப் போட்டு முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும். இது வரை நிலுவையில் இருந்து வந்த கடன் தொகைகள் வசூலாகும். ஆரோக்கியம் அக்கறை தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுதல் பொறுப்புகள் தலைவலியை உண்டாக்கும். அமைதியை தேடி அலைவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகள் சரியாக முடிப்பதில் கவனம் தேவை.