Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 10-04-2021

41

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். நீங்கள் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். தேவையில்லாத பிரச்சினைகளை சுமக்க நினைத்தால் மன உளைச்சல் உண்டாகும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சொல்லும் சொற்கள் இனிமையாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கும். சுய தொழிலில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். புதிய தொழில் நுட்பங்களை கையாள்வதற்கு கற்றுக் கொள்வீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய திறமைக்கு ஏற்ப பலன்களும் உண்டு. முயற்சிகள் வீண் போவதில்லை என்பதை உணர்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் யோகம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறக் கூடிய அற்புதமான நாளாக அமையும் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் தொடர்பான விஷயத்தில் சாதகமான பலன்கள் உண்டு. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. எதிர்கால திட்டமிடல் மேலோங்கி காணப்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சுப செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி உற்சாகம் தரக்கூடிய அற்புதமான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. சகோதர சகோதரிகளின் ஒற்றுமையில் இடையூறுகள் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி உண்டாகும். சுய தொழிலில் லாபம் காண்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு முனைப்பாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்து வந்து எதிரிகளின் தொல்லை நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வகையில் சில வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெண்கள் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் ஏற்றம் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புது உற்சாகம் பிறக்கும். இதுவரை உங்களது மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தெளிவான முடிவு எடுக்க கூடிய தன்னம்பிக்கை பிறக்கும். சுய தொழிலிலும் கூட்டாளிகளிடம் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்து அதற்கு எதிர்மாறாக சில விஷயங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் யுத்தியை கற்றுக் கொள்வீர்கள். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும். பூர்விக சொத்துக்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகமாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வீண் விரையங்கள் ஏற்படும். உடல் ரீதியான பிரச்சினைகளை சந்திப்பீர்கள். சுய தொழிலில் லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.