Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 30-3-2021

45

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் வகையில் திடீர் தனவரவு உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை தேவை. சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு லாபம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதியான சூழ்நிலை நிலவும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கும். இருவரும் மனதை ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நிதானம் தேவை. சுய தொழிலில் எதிர்பார்க்கும் லாபம் உண்டு.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் செய்ய முடிவு சாதகமான பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவுகள் திருப்தியளிக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மேலும் முன்னேற்றம் உண்டு.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்துக் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மந்தநிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் கடன் நிலுவை தொகைகள் வசூலாகும். சொத்துக்கள் வாங்கும் விற்கும் யோகம் உண்டு.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் சுபகாரிய நிகழ்ச்சிகள் தடையின்றி நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கப்பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய நபர்களின் அறிமுகங்களை பெறுவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி நல்ல ஒரு தெளிவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் நீங்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி பெறும் யோகமுண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்யோன்யம் அதிகரிக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டு. சுய தொழிலில் லாபம் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்க முயற்சிகளில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்கள் பொறுமையை கையாள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது மூலம் மன அமைதி பெறலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைப்பதில்லை பிரச்சனைகள் நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களின் பகைவர்களையும் இனம் கொள்வீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் தோல்வி ஏற்படுவதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தீரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் வேளையில் இருப்பவர்கள் தங்களது மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும்.

மீனம்

நீங்க ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கொடுக்கும். உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உங்களைப் புரிந்து கொள்ளாத வரிகளைப் புரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும்.