Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 24-3-2021

106

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சரியான பலன் கிடைக்கக் கூடிய வகையில் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான கூட்டாளிகளுடன் ஆன பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பெண்கள் சுய மரியாதையுடன் செயல்படுவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகள் கைகூடி வரும் யோகமுண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் கனவு நிறைவேறும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரக்கூடிய வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் ஒரு படி மேலே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி என்பது கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். பெண்கள் இறை வழிபாடு செய்வது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் மனதில் இருந்து வந்த கவலைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களை சுற்றியிருப்பவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு நடந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் லாப வெறியால் தடைக்கற்களை படிக்கற்களாக மாறும். பெண்களுக்கு தன்னம்பிக்கை மேலும் கூடும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மன அமைதியுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எதிர்பார்ப்பு சில ஏமாற்றங்களை சந்திக்கலாம். திடீர் பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெண்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி உண்டாக கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டு. உத்தியோகத்தில் உடன் பணிபுரியும் சக பணியாளர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுத்த கடன் வசூல் ஆக கூடிய வாய்ப்புகள் உண்டு.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் ராஜயோகம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கண்கள் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை எதிர்க்கும் படியான சூழ்நிலை ஏற்படும் சூழ்நிலை ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பயணங்கள் மூலம் அனுகூல பலன்கள் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வீண் விரயங்களையும் தவிர்த்துக் கொள்வது மூலம் நன்மைகளை பெறலாம். ஆரோக்கியம் சீராக இருக்க உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுத்து வைக்கும் முயற்சிகளில் திடீர் தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி உங்களுக்குத் தான். உத்யோகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அதிகாரிகள் உடைய பாராட்டை பெறுவீர்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சமூகத்தின் மீதான அக்கறை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த நஷ்டங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் அனுகூல பலன் தரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரியும் பணியாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் பிரச்சனைகள் நடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கவலைப்படுவது நீங்கும். கணவன் மனைவி உறவு சிக்கல் தீரும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் ராஜயோகம் ஏற்படும். பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் அமையும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. துன்பங்கள் தீர ஆனைமுகனை வழிபடுவது நல்லது.