Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 23-3-2021

20

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் அமைதி நிலவ பொறுமையை கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்த போட்டிகள் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களுடைய உதவி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் மனதில் சில குழப்பங்கள் எழலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய எதிரிகளை இனம் கண்டு கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை திறம்பட சமாளிப்பீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது மிகவும் நல்லது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆவதற்கு இடையூறு ஏற்படும். கணவன் மனைவி இடையே சிலசண்டை சச்சரவு குறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை அமைதி காப்பது நல்லது. சுயதொழிலில் மற்றவர்களை மதிக்கும் படியான உயர்வு உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவை இல்லாத பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உங்களுடைய பலவீனம் அறிந்து சிலர் பிரச்சனை செய்வார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான இட மாற்றம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்க வாய்ப்புகள் வேண்டும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பணவரவு எதிர்பாராத மாற்றங்களை உருவாக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைக்க அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. சுய தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதையும் முன்னின்று செயல்படுத்த காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் அமோகமான வெற்றி காண கூடிய யோகம் உண்டு. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிலும் உற்சாகம் இல்லாமல் சோர்வுடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றமான பாதையில் செல்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்தி கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய புதிய சிந்தனைகள் மூலம் புதிய பாதைகள் பிறக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுமானவரை கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நன்றி கடன் செலுத்தக் கூடிய வாய்ப்புகள் அமையும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருக்கும் சில விஷயங்கள் நீங்கும். நண்பர்களுடனான பிரச்சனைகள் தீர்வதற்கு விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சுய தொழிலில் லாபம் உண்டு.