Take a fresh look at your lifestyle.

இன்றைய ராசி பலன் – 21-3-2021

52

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் வகையில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் காலதாமதம் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வீண் விரயங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் இருக்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது உத்தமம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எவரையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் தங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்களின் தேவையை அறிந்து செயல்படுவது ஏற்றத்தைத் தரும். ஆரோக்கியம் சீராக இருக்க உணவு கட்டுப்பாடு அவசியமாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுமை அவசியம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை நீங்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல பலன் காண்பீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த சில விஷயங்கள் முன்னுக்குப்பின் முரணாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் நீங்கும். உத்தியோகத்தில் பணிபுரிபவர்கள் இட மாற்றம் குறித்த விஷயங்களில் சாதக பலன்களை காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதற்கான முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சில தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் யோகம் உண்டாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருந்து வந்த கவலைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நலம் ஆகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ரீதியான பிரச்சினைகள் படிப்படியாக குறையும். நீங்கள் மனதில் நினைத்த விஷயம் ஒன்று நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பூர்விக சொத்துக்கள் அனுகூல பலன் தரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேற்றுவதற்குரிய சந்தர்ப்பங்கள் அமையும். தடைப்பட்ட திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தொடங்கி நிறைவேறும். குடும்பத்தோடு குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் யோகம் உண்டு.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைக்கும் ஒன்று வேறு ஒன்றாக தெரிவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது. கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் அதிகரிக்க நேரிடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத ஆடம்பரத்தை கட்டுப்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய மேலதிகாரிகள் உடனான பிரச்சனைகளை எண்ணி டென்ஷனுடன் இருப்பீர்கள். கணவன் மனைவி உறவு வலுவாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைக்கும் சில விஷயங்கள் வெற்றி பெற வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும் எனினும் பொருட் சேதம் ஏற்படாமல் இருக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். வேலை தேடி அலைந்து கொண்டு இருப்பவர்களுக்கு மனதுக்குப் பிடித்த நல்ல வேலை அமையும்.